news

Pattanam Festival - BTMJ Invitation 2017

Written by Administrator on . Posted in news

அன்னை தேசத்திற்கு அந்நிய மண்ணில் ஒரு விழா!

 

பாலூட்டி தாலாட்டிய பட்டணத்து அன்னைக்கு பாலை பெருவெளியில் பட்டணம் விழா!

 

பஹ்ரைனில் மாமன்னர் ஹமத் பின் ஈசா அல்கலீபா முடிசூட்டிய அதே நாளில் பட்டணத்து மண்ணிற்கும் பஹ்ரைனில் ஒரு விழா! இன்ஷா அல்லா – இனி ஆண்டு தோறும் இதே நாளில்!

 

அன்னை தேசத்து கவிஞர்களையும்கலைஞர்களையும்படைப்பாளிகளையும்சாதனையாளர்களையும் கவுரவித்து உற்சாகப்படுத்த ஒரு விழா!

 

பட்டணத்து கதைகளையும்கலைகளையும்நினைவுகளையும்கனவுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு விழா!

 

பட்டணத்து உணர்வில் – சுவையூறும் உணவில் திளைத்திருக்க ஒரு விழா!

 

அகில உலக பட்டணத்தாரே! ஒன்று கூடுங்கள்!  அரபு தேசம் பஹ்ரைனுக்கு பறந்து வாருங்கள்!

 

எல்லோரும் கொண்டாடுவோம்!  அன்னை தேசத்தை கொண்டாடுவோம்!

BTMJ General Meeting (பொதுக்குழு) 2015

Written by Administrator on . Posted in news

எல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 33வது பொதுக்குழு 30/01/2015 (Centurry Anarath Hall-Bahrain)ல் வைத்து சிறப்பாக நடந்தது.   அல்ஹம்துலில்லாஹ்...

சென்ற வருடம் தேர்ந்தெடுக்கபபட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வில் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதலில் Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.

BTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

We have 64 guests and no members online