news

BTMJ annual general body meeting 2017

Written by Administrator on . Posted in news

BTMJ பொதுக்குழு 2017

 

எல்லாம் வால்லா  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்...

      ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam  கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.

       BTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிர்வாகம் பதவி ஏற்று மூன்று வருடங்கள் கடந்து ஓடிவிட்டனஅதாவது இந்த 36 மாத காலகட்டத்தில்  முடிந்த அளவு பல  நல்லா விசயங்கள் செய்ய முயற்சித்து உள்ளோம். அதில் இயன்ற அளவு நீங்கள் கொடுத்த ஆதரவுடான் ஒரு சில  விசயங்கள் செய்யமுடிந்தன. பஹ்ரைன்ல் வாழும் நாம் ஒன்றாகவும், ஒற்றுமையாக இருந்தது கொண்டுதான்,  இதனை செய்ய முடிந்ததுஇனியும் அதிகமாக நம்மால் இயன்ற உதவிகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும்.

இந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜனாப். பாக்ருதீன் கோய தங்கள்நமுக்கு  நல்ல ஒரு இம்மமாகவும்குடும்ப தலைவராகவும் இருப்பதால், நம்மிடம் வேற்றுமை இல்லாமல், ஒற்றுமையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.  தொடர்ந்து இதுபோல் நாம் எப்போதும் இருக்க அல்லாஹ் அருள் செய்யட்டும். ஆமீன்..  

 

BTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017

Written by Administrator on . Posted in news

அஸ்ஸலாமும் அலைக்கும்
அன்புள்ள சகோதரர்களே,
இன்ஷா அல்லாஹ் பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லீம் ஜமாத்வுடைய பொதுக்குழு கூட்டம்” எல்லா வருசமும் நடைபெற்று வருகின்றன அதேபோல் இந்த வருடமும் வரக்கூடிய 17/02/2017 தியதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை ஆனாரத் ஹாலில்” வைய்த்து நடைபெற உள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.
 நிகழ்ச்சி நிரல்:-
§  BTMJ -ன் ஆண்டுஅறீக்கை வாசித்தல்.
§  ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசித்து புதிய விஷயங்களுக்கு அங்கீகாரம் பெறுவது.
§  மற்றும் உள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்தல்.
இந்த கூட்டத்துக்கு தாங்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுக்குமாறும்மட்டுமின்றி தெரிந்த நமது உறுப்பினர்களையும் அழைத்துகொண்டு வரும்மாறும்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
அன்புடன்,

 

BTMJ

BTMJ Family Gathering 2016

Written by Administrator on . Posted in news

பஹ்ரைன் தேங்காய்பட்டனம் முஸ்லிம் ஜமாஅத்
        “ஓன்றுகூடல் நிகழ்ச்சி”
 
வரலாற்றில் முதன்முறையாக நம் பிறந்த மண்ணிற்கு தேங்காய்பட்டணத்துக்கு விழா எடுத்து சிறப்பாய் நடத்தி முடித்தது BTMJ நிர்வாகம்.  
 
BTMJ தலைவர் ஜனாப். முஹம்மது மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார், விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்ளப்பட்டது, கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.
 
பட்டணம் மக்களும் அவர்தம் குடும்பத்தினரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சகோதரிகள் முதன்முறையாக தங்கள் வீடுகளில் செய்த பட்டணத்து பலகாரவகைகளின் அணிவகுப்பு நடத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றனர்.
 
குழந்தைகள் பேச்சு, கிராஅத், பாட்டு என விழாவினை தம் பங்கிற்கு சிறப்பித்தனர்.
 
பட்டணத்தைப் பற்றி ஜனாப். தாசீம் பாடிய பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.  
 
கவிஞர் தாஹா ஹுசைனின் பட்டணத்தின் தென்றல் நம்மை பட்டணத்திற்கே கொண்டு சென்றது. 
 
ஜனாப் M.A.M. ஷரபுதீன் குடும்பமற்ற தனி வாழ்க்கை என்னும் தலைப்பிலான பேச்சு தனித்து வாழ்வோரின் தவிப்பை சொன்னது.
 
ஜனாப். குறிஞ்சியாரின் அன்னை தேசத்திலிருந்து எண்ணெய் தேசத்திற்கு என்னும் தலைப்பிலான பேச்சு வளைகுடா நாட்டைப் பற்றிய மாயையினை கோடிட்டு காட்டியது.
 
ஜனாப். நசீர் ஆலிம்ஷா பட்டணத்தின் சிறப்புக்கள் பற்றியும் பட்டணத்து மக்களாய் பிறந்த பெருமை பற்றி பேசினார்.
 
முத்தாய்ப்பாக குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றின் பிரச்னைகளை அணுகும் முறை பற்றி ஜனாப் செய்யது பக்ருதீன் தங்ஙள் பேசினார்,
 
நன்றியுரை ஜனாப். ஸபூர், BTMJ’s Secretary வழங்கினார், வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக வழங்கிய ஜனாப். முத்தலிப் அவர்களையும் பாராட்டப்பட்டது.
 
பஹ்ரைன் தேசிய தினம் கொண்டாடும் இவ்வேளையில் ஒரு பட்டணம் விழா.  ஆஹா என்ன பொருத்த்ம்.  இனி கடைசி பட்டணத்துக்காரன் பஹ்ரைனில் உள்ள நாள் வரை இது நினைவிருக்கும். இன்ஷா அல்லாஹ்.
 
இந்நாளில் பட்டணம் விழா கொண்டாடி பஹ்ரைன் தேசிய தினத்துக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் குறூப் போட்டோ எடுக்கப்பட்டது.  
 
இரவு விருந்துடனும் விழா இனிதே முடிவுற்றது.
 
BTMJ Family Gathering 2016 at Bahrain

We have 16 guests and no members online